அதிர்ச்சி... 58,00,000 பேர் பென்ஷன் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்... நிலுவைத் தொகை ரூ.4,600 கோடியை எட்டியது!

அதிர்ச்சி... 58,00,000 பேர் பென்ஷன் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்... நிலுவைத் தொகை ரூ.4,600 கோடியை எட்டியது!

கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது கேரள அரசு. கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடந்த 6 மாதங்களாக 58 லட்சம் பயனாளிகள் இதுவரை ஓய்வூதியம் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கேரளத்தில் பினராயி விஜயன் முதல்வரான பிறகு இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

நடப்பு நிதியாண்டு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதிகபட்ச திட்ட நிதியை செலவிட அரசாங்கம் முயற்சித்தாலும், நிச்சயமாக, இந்த குறுகிய காலத்திற்குள் ரூ.4,600 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையை அரசாங்கத்தால் திரட்ட முடியாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பல்வேறு திட்டங்களுக்காக குறைந்தது ரூ.25,000 கோடியை செலவிடும் கேரளம், கடன் வாங்குவதற்கு மத்திய அரசு வரம்பை விதித்த பின்னர் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடி காரணமாக பல மசோதாக்களை அடுத்த நிதியாண்டுக்கு தள்ளி வைக்கும் முயற்சியில் கேரள அரசாங்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஓய்வூதிய நிலுவைத் தொகையை ஓரளவுக்காவது வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

ஒரு மாத ஓய்வூதியம் வழங்க கேரள அரசுக்கு ரூ.775 கோடி தேவைப்படுகிறது. கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தனது பட்ஜெட் உரையில், ஓய்வூதியம் வழங்க தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.9,000 கோடி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த நிதியாண்டு துவக்கமான ஏப்ரல் முதல் கடன் வாங்க முடியும் என்பதால் ஓய்வூதிய நிலுவைத் தொகையை அரசாங்கம் ஒரே நேரத்தில் செலுத்தி விட முடியும் என்றாலும், அந்த நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டால், மற்ற தேவைகளுக்கான செலவுகள் மோசமாக பாதிக்கும். கூடுதலாக, நிதியாண்டின் தொடக்கத்திலேயே அதிகளவில் கடன் வாங்குவது நிதியாண்டின் கடைசி கட்டத்தை மேலும் பாதிக்கும். மாநிலத்தின் வருவாயை மேம்படுத்த தேவைப்பட்டால், பிளான் பி செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

செலவினங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உள்ள ஒரே வழி, ஓய்வூதிய வயதை 56 லிருந்து 57 ஆக உயர்த்துவது தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இது ஊதிய திருத்தக் குழுவின் கூற்றுப்படி, ஆண்டுக்கு ரூ.4,000 கோடியை சேமிக்க முடியும். இருப்பினும், நிதியமைச்சரின் பிளான் பி ஓய்வூதிய வயதை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறதா என்பது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in