பிரபல நடிகரிடமிருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்...சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் கருணாஸ். பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு திருவாடானை தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். நடிகர் கருணாஸ், திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர். அவரது கைப்பையில் 40 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கருணாஸிடம் கேட்டபோது, தன்னிடம் துப்பாக்கி உரிமம் இருப்பதாகவும், தோட்டாக்கள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது.

துப்பாக்கி தோட்டாக்கள் (கோப்பு படம்)
துப்பாக்கி தோட்டாக்கள் (கோப்பு படம்)

ஆனால், துப்பாக்கி தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்கள் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in