சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சதுரகிரி மலைக்கோயில் செல்லும் பக்தர்கள்
சதுரகிரி மலைக்கோயில் செல்லும் பக்தர்கள்

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி முதல் சதுரகிரி மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில்

இந்த நிலையில் வைகாசி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூன் 4-ம் தேதி பிரதோஷம், ஜூன் 6-ம் தேதி அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு ஜூன் 4 -ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 0 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இப்படி அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்தாலும், ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்தாலும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

சதுரகிரி பக்தர்கள்
சதுரகிரி பக்தர்கள்

மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் இரவில் கோயில் வளாகப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in