போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை… 15 நாட்களில் 336 பேர் கைது!

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை… 15 நாட்களில் 336 பேர்  கைது!
Updated on
1 min read

தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 15 நாட்களில் 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே போல், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.1.18 கோடி மதிப்பிலான 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அவர்களில் இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடரும் என காவல்துறையினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in