ரெமல் புயல் தொடர்பான நிலச்சரிவு, புயல் மற்றும் விபத்துகளில் சிக்கிய நான்கு வடகிழக்கு மாநிலங்களின் 32 பேர் பலியாகியுள்ளனர்.
மிசோரம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் அதிகாரபூர்வமாக இன்று மாலை தெரிவித்தனர். கனமழையைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலர் பலியாக, இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அசாமில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மிசோரமில் இறந்த 27 பேரில், இருவர் சிறார்கள். மேலும் அவர்களில் பெரும்பாலோர் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். மேலும் சுமார் 8 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை 6 மணியளவில் ஐஸ்வால் மெல்தூம் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரி கனமழையால் இடிந்து விழுந்தது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மிசோரமின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் கூற்றுப்படி, மே 27 அன்று ரெமல் புயலின் தாக்கத்துடன் கனமழை தொடங்கியது. தொடர்ந்து மே 28 அன்று அது தீவிரமடைந்தது. இதனால் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மிசோரம் முதல்வர் லால்துஹோமா, "சூழலைக் கையாள நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார். மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணைத் தொகையும் அறிவித்தார்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, இன்று மாலை வரை புயல் காரணமாக 17 வயது மாணவர் உட்பட மூன்று பேர் இறந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, அசாமின் பல்வேறு பகுதிகளில் 60 முதல் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஏழு நாட்களில் மாநிலத்தில் 450.2 மிமீ மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி, ஜூன் 2 வரை கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!
டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!
மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!