பற்றி எரிந்த பெயிண்ட் தொழிற்சாலை... தீயில் கருகி எலும்புக்கூடாக சாம்பலான தொழிலாளர்கள்!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

திருவள்ளூர் அருகேன் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத்தை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் அடுத்த காக்களூர் தொழிற் பேட்டையில் ஜென் பெயிண்ட்ஸ் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மதியம் இங்கு சோபனா, சுகந்தி, பார்த்தசாரதி, புஷ்கர் என 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணி அளவில் திடீரென இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை கண்டதும் சோபனா என்பவர் மட்டும் தப்பித்து வெளியே வந்துள்ளார். மற்ற மூவரும் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மளமளவென தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரியத் துவங்கியது.

தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

அப்போது தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. அதே நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் சீனிவாசன் என்பவர், தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, முற்றிலும் எரிந்த நிலையில் இரண்டு எலும்பு கூடுகள் மட்டும் இருந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு
சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு

இதையடுத்து அந்த எலும்புக்கூடுகளை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் இருவரது உடல்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழந்தவர்கள் யார் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரும்புகை சூழ்ந்த காக்களூர் தொழிற்பேட்டை
கரும்புகை சூழ்ந்த காக்களூர் தொழிற்பேட்டை

இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் நிர்வாக உரிமையாளர் கணபதி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்சாலை, சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டிருந்தால் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in