விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் - வெளியானது இறுதிப் பட்டியல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் - வெளியானது இறுதிப் பட்டியல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று யாரும் மனுக்களைத் திரும்ப பெறவில்லை.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

இதில் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 29 பேர்களில் யாரும் தங்களது மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியானது தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், 4 பேர் பானை சின்னத்தைக் கேட்டிருப்பதால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

மேலும், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் திமுக - பாமக - நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in