
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த 26 இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதினர் திடீரென மரணம் அடைவது, இதய நோயால் பாதிக்கப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கம், வேலை பளு உள்ளிட்டவறை முக்கிய காரங்களாக பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆந்திராவில் 26 வயது இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் பகுதியில் விநாயகர் சிலை வைத்து மூன்று நாட்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர்.
நேற்று இரவு விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள் நடனமாடினர். அப்போது 26 வயது இளைஞர் பிரசாத் நடனம் ஆடி கொண்டே திடீரென சுருண்டு விழுந்தார்.
அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.