இயங்காத பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்... சிபிசிஐடி போலீஸ் அதிர்ச்சி!

இயங்காத பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்... சிபிசிஐடி போலீஸ் அதிர்ச்சி!

பண்ருட்டி அருகே இயங்காத பெட்ரோல் பங்கில் ஒன்றில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு அஞ்சலி
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு அஞ்சலி

அதன் தலைவரான உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை
சிபிசிஐடி போலீஸ் விசாரணை

விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை காவலில் எடுத்து மாதேஷை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாகவும், பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மெத்தனால்
மெத்தனால்

இதுதொடர்பாக அந்த பெட்ரோல் பங்கிற்கு சிபிசிஐடி போலீஸார் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in