திடீரென இரண்டு பிணைக் கைதிகளை மட்டும் விடுவித்த ஹமாஸ்!

திடீரென இரண்டு பிணைக் கைதிகளை மட்டும் விடுவித்த ஹமாஸ்!

இஸ்ரேலில் இருந்து பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் இரண்டு அமெரிக்கர்களை மட்டும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 14-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, காஸா நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதலை தொடங்கியது.

ஹமாஸ் தாக்குதல் நடத்தியது மட்டும் இல்லாமல், எல்லைக்குள் புகுந்து பலரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இந்நிலையில் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பிணைக் கைதிகளை மீட்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

பிறந்த குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியோர்களை ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிணைக் கைதிகளில் இருவரை மட்டும் ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர்கள்.

ஜுடித்துக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டு உள்ளார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இன்னும் 200 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in