தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்… 14 பேர் பலியான சோகம்!

தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்… 14 பேர் பலியான சோகம்!

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் பிரேசில் நாட்டில் அமேசானாஸ் என்ற மாகாணத்தில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் விமானிகளுடன் சேர்த்து 14 பேர் பயணித்தனர்.

இந்நிலையில் அந்த விமானம் திடீரென தரையில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. விமானத்தின் உள்ளே இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். இதனை அமேசானாஸ் மாகாண நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தவறான வழியைத் தேர்வு செய்து தரையிறக்கும் போது விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் தலைநகரில் இருந்து 200 மைல்கள் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் 14 பேரின் உடல்களையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உடல்கள் அனைத்தும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து பிரேசில் விமானப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in