வெயில் கொடுமையால் ஹஜ் யாத்திரை சென்ற 1,300 பேர் உயிரிழப்பு... 98 பேர் இந்தியர்கள்!

ஹஜ் யாத்திரீகர்கள்
ஹஜ் யாத்திரீகர்கள்
Updated on
2 min read

கடும் வெப்பம் காரணமாக மத்திய கிழக்கு நாடான சவுதியில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 1,300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 98 பேர் இந்தியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு, கடந்த 14-ம் தேதி இந்த புனித யாத்திரை ஆரம்பமானது. ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வருகை தருகிறார்கள்.

ஹஜ்
ஹஜ்

இந்தியாவில் தனியார் பயண நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் இந்தியா ஹஜ் கமிட்டி ஹஜ் பயணத்துக்கு மக்களை அழைத்து சென்று வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹஜ் யாத்திரையின்போது 1,300 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்திரீகர்கள்
ஹஜ் யாத்திரீகர்கள்

இதுதொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், “அதீத வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 1,300 பேர் உயிரிழந்துள்ளார். இதில் 83 சதவீதம் பேர் மெக்காவில் உயிரிழந்துள்ளனர். மேலும் 95 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் மெக்காவில் புதைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 660-க்கும் மேற்பட்ட எகிப்தியர்களும் அடங்குவர். அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள்” என்று அவர் கூறினார்.

மேலும், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குச் செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹஜ் யாத்திரீகர்கள்
ஹஜ் யாத்திரீகர்கள்

இந்த ஆண்டு 50,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட யாத்ரீகர்களை சவுதி அரேபியாவிற்கு எகிப்து அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவைச் சேர்ந்த 98 பேரும், ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பலரும் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இரண்டு பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், 10 சதவீத பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in