சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமான சேவைகள் ரத்து: பயணிகள் அவதி

விமான பயணம்
விமான பயணம்

சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி, ஷீரடி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 12 விமானங்கள் இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பயணிகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யட்டதாக விமான நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 4 விமானங்கள், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஷீரடிக்கு சென்று, திரும்பும் இரண்டு சேவைகள், ஹைதராபாத்துக்கு சென்று, திரும்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இரண்டு சேவைகள் உள்பட ஒரே நேரத்தில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான சேவை ரத்து
விமான சேவை ரத்து

திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in