சோகம்… ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்!

சோகம்… ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்!

அமெரிக்காவில் அண்மையில் ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி காலமானார்.

டோரத்தி ஹர்ஃப்னர் என்ற மூதாட்டி கடந்த 1-ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். அவரது இந்த சாதனை உலகம் முழுவதும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒட்டாவாவில், விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்திருந்தார்.

இதன் மூலம், அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரமே ஆன நிலையில், அவர் உயிரிழந்தார். தூக்கத்தில் மூதாட்டி இறந்ததாக அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார்.

மூதாட்டி டோரத்தி தூங்கிக் கொண்டிருந்த போது இறந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது சாதனைக்கான சான்றிதழை வாங்குவதற்குள் மூதாட்டி காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in