
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் சென்னையிலும் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், மக்களிடம் நேரடியாக சென்று டெங்கு கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.