சென்னையை நெருங்கும் 'மேன்டூஸ்' புயல்: 34 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னையை நெருங்கும் 'மேன்டூஸ்' புயல்: 34 மாவட்டங்களில் மழை பெய்யும்

வங்கக்கடலில் உருவான ' மேன்டூஸ்' புயல் தீவிரம் அடைந்து, சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புயல் காரணமாக 34 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 270 கி.மீ தொலைவில் 'மேன்டூஸ்' புயல் மையம் கொண்டிருக்கிறது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் இந்த புயல் மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்," தீவிர புயலாக உள்ள 'மேன்டூஸ்' அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும். புயல் இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்" என்றார்.

புயலினால் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையினால் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்று தமிழக தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in