`எங்களை மதிப்பதில்லை; ஓசியில் பயணிக்க மாட்டோம்'- டிக்கெட் கேட்டு நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்

`எங்களை மதிப்பதில்லை; ஓசியில் பயணிக்க மாட்டோம்'- டிக்கெட் கேட்டு நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்

``ஓசியில் பயணம் செய்வதால் எங்களை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. அதனால் ஓசியில் பயணம் செய்ய மாட்டோம்" என்று கூறி நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு பெண்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

அரசு பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் செய்வது குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த பேச்சு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, விளையாட்டாக பேசினேன் என்றும் இதை சர்ச்சையாக்கிவிட்டனர் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இதனுடைய கோவையில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, ``ஓசியில் நான் பயணிக்க மாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுங்கள்'' என்று கண்டக்டரிடம் வாக்குவாத செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில் அதிமுகவினர் இருப்பதாக திமுகவினர் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரோட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளதுங "நாங்கள் ஓசியில் பயணிக்க மாட்டோம். எங்களுக்கு டிக்கெட் கொடுங்கள்" என்று நடத்துனருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சித்தேரியில் இருந்து பெருந்துறைக்கு அரசு பேருந்து ஒ்றுசென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய பெண்கள் கண்டக்டரிடம், `எங்களுக்கு டிக்கெட் கொடுங்கள்' என்று கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டர், பெண்களுக்கு டிக்கெட் கிடையாது என்று கூறியுள்ளனர். "நாங்கள் ஓசியில் பயணிக்க மாட்டோம். டிக்கெட் கொடுங்கள்" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், "நாங்கள் ஓசியில் பயணம் செய்வதால் தான் பேருந்துகள் நிற்பதில்லை. இதனால் நாங்கள் ஓசியில் பயணம் செய்ய மாட்டோம்" என்று அவர்கள் காட்டமாக கூறினர். "பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்பதால் அரசு ஊழியர்கள் எங்களை மதிப்பதில்லை" என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர். தற்போது இலவச பயணம் குறித்து பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in