4 மணிநேரம் தாமதமாக உணவு கொண்டு வந்த சொமோட்டோ ஊழியர்: ஆரத்தி எடுத்து பாட்டுப்பாடி வரவேற்ற தொழிலதிபர்

4  மணிநேரம் தாமதமாக உணவு கொண்டு வந்த சொமோட்டோ ஊழியர்: ஆரத்தி எடுத்து பாட்டுப்பாடி வரவேற்ற தொழிலதிபர்

டெல்லியில் ஆர்டர் செய்த உணவை நான்கு மணி நேரம் தாமதமாக வந்த சொமோட்டோ ஊழியருக்கு ஆரத்தி எடுத்து பாட்டுப்பாடி தொழிலதிபர் வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் தொடர் பண்டிகை காலம் என்பதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக டெலிவரி முகவர்கள் பொருட்களைத் தாமதமாக கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் தொழிலதிபர் சஞ்சீவ்குமார். இவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு வருகைக்காக அவர் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார்.. ஆனால், உணவு வரவில்லை. கடைசியில் 4 மணி நேர தாமதத்திற்குப் பின் உணவை டெலிவரி செய்யும் வாலிபர் வந்தார். அவருக்கு உணவு ஆர்டர் கொடுத்த சஞ்சீவ் குமார் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தார். இதனால் உணவு டெலிவரி செய்ய வந்த வாலிபர் அதிர்ச்சியடைந்தார்.

தொழிலதிபர் சஞ்சீவ்குமார் அத்துடன் விடவில்லை. பிரல இந்தி பாடகர் குமார் சானு பாடிய "ஐயே ஆப்கா இன்டேசர் தா" என்ற நகைச்சுவைப் பாடலைப் பாடியவாறு உணவு ஆர்டரை பெற்றுள்ளார். இந்த காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன் சொமோட்டோ நிறுவன ஐடியிலும் இந்த பதிவை சஞ்சீவ்குமார் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in