ஹெலிகாப்டரில் தொங்கியபடி 25 புல்-அப்ஸ்கள்: வித்தியாசமான கின்னஸ் சாதனை வீடியோ

ஹெலிகாப்டரில் தொங்கியபடி 25 புல்-அப்ஸ்கள்: வித்தியாசமான கின்னஸ் சாதனை வீடியோ

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டச்சு உடற்பயிற்சி பயிற்சியாளரான ஸ்டான் பிரவுனி, பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடியே ஒரு நிமிடத்தில் அதிக புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சக தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, ​​ கடந்த ஜூலை 6 -ம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவெனென் ஏர்ஃபீல்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஸ்டான் பிரவுனி கால்ஸ்தெனிக்ஸ் துறையில் நிபுணராக உள்ளார். கால்ஸ்தெனிக்ஸ் என்பது ஒருவரின் உடல் தகுதி மற்றும் இயக்கத்தின் நேர்த்தியை மேம்படுத்தும் வகையிலான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் ஆகும். ஸ்டான் பிரவுனியின் கின்னஸ் சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஏற்கெனவே ஆர்மீனியாவைச் சேர்ந்த ரோமன் சஹ்ரத்யான் என்பவர் பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி 23 புல்-அப்ஸ்களை எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது நடந்த உலக சாதனை முயற்சியில் ஆல்பர்ஸ் 24 புல்-அப்ஸ்களை எடுத்து முந்தைய சாதனையை முறியடித்தார். அடுத்ததாக பிரவுனி ​​25 புல்-அப்ஸ்களை எடுத்து முந்தையை இரு சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தார். இவரின் உலக சாதனையை கின்னஸ் சாதனை அமைப்பு பாராட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in