1.85 கோடி ஹவாலா பணத்துடன் வந்த வாலிபர்கள்: சோதனையில் அதிர்ந்து போன போலீஸ்

1.85 கோடி ஹவாலா பணத்துடன் வந்த வாலிபர்கள்: சோதனையில் அதிர்ந்து போன போலீஸ்

வாகன சோதனையில் 1.85 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த பணத்தையும், இரண்டு வாலிபர்களையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் பூக்கடை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் கொண்டு வந்த பையை போலீஸார் சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக 1 கோடியை 85 ஆயிரம் ரூபாய் இருந்தது. மேலும் பணத்திற்குண்டான ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லாததால் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத் (52) மற்றும் மண்ணடியை சேர்ந்த அம்ஜித் கான் (26) என்பதும், இவர்கள் பர்மா பஜாரில் சுல்தான் என்பவரிடம் வேலை செய்து வந்ததும் தெரிவந்தது. மேலும் சுல்தான் கொடுத்த பணத்தை கொண்டு சென்ற போது போலீஸில் சிக்கியது தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீஸார் 1 கோடியே 85 ஆயிரம் ஹவாலா பணம் மற்றும் இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in