துணையில்லாத பெண்களுக்கு தூண்டில் போட்ட வாலிபர்கள்: வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் அனுப்பி சிக்கினர்

துணையில்லாத பெண்களுக்கு தூண்டில் போட்ட வாலிபர்கள்: வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் அனுப்பி சிக்கினர்

சமூக வலைதளங்களில் துணையில்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு ஆபாச புகைப்படம், ஆபாச செய்திகளை வாட்ச்அப்புக்கு அனுப்பிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ச் அப் எண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி தவறான உறவுக்கு அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் வாட்ச் அப் மூலம் ஆபாச தகவல்கள் அனுப்பிய சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (37) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த மதி (எ) மதியழகன்(35), என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள துணை இல்லாத பெண்களின் விவரங்கள் மற்றும் செல்போன் விவரங்களைச் சேகரித்து மணிகண்டன், மதியழகன் இருவரும் ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி ஆபாசமாக பேசி தவறான உறவுக்கு அழைப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in