மது குடிக்க பணம் தர மறுத்த இளைஞர் கொலை: சிசிடிவியால் சிக்கிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த இளைஞர்  கொலை: சிசிடிவியால் சிக்கிய  2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மது குடிக்க பணம் தராத வாலிபரை செங்கல்லைக் கொண்டு அடித்துக் கொலை செய்த 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதிக்குட்பட்ட கோரா காலனி எதிரே உள்ள டிடிஏ பேக்கர் மார்க்கெட் அருகே ஜன.1-ம் தேதி வாலிபர் உடல் கிடந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்குலாம் என்று காஜிபூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவர் விகாஷ் யாதவ்(20) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் நடத்தினர். அப்போது விகாஷ் கடைசியாக இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விகாஷிடம் புத்தாண்டிற்கு மது மற்றும் பணம் தருமாறு அவரது நண்பர் ஹிமான்ஷு,தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோரா காலனி அருகே புத்தாண்டு அன்று விகாஷ் யாதவ் மது குடித்துக் கொண்டிருந்த போது ஹிமான்ஷு உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து விகாஷை தாக்கியுள்ளனர். அப்போது செங்கல்லை கொண்டு அவரது முகம், தலையில் கொடூரமாக தாக்கி விட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விகாஷ் யாதவ் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஹிமான்ஷு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேரை நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in