வங்கி ஊழியர்கள் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே; சினிமாவை விஞ்சிய கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்

வங்கி ஊழியர்கள் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே; சினிமாவை விஞ்சிய கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்

திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்களை பட்டப்பகலில் கட்டிப்போட்டு மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கட்டி போட்டார். அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவியும், மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இது குறித்த தகவல் படி அங்கு வந்த திண்டுக்கல் போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். விசாரணையில் நெட்டு தெருவைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் (23) என தெரியவந்தது. அவரை அழைத்துச் சென்ற போலீஸார் திண்டுக்கல் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸார் விசாரணையில், வாழ பிடிக்காததால் சினிமாக்களில் காட்டப்படும் வங்கி கொள்ளை காட்சிகளை பார்த்து வங்கி கொள்ளையில் கலீல் ரஹ்மான் ஈடுபட முயன்றது தெரிந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in