அழுது கொண்டே அம்மாவிற்கு வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்த மகன்: கந்துவட்டி கொடுமையால் நடந்த பயங்கரம்!

அழுது கொண்டே அம்மாவிற்கு வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்த மகன்: கந்துவட்டி கொடுமையால் நடந்த பயங்கரம்!

கந்துவட்டிக் கொடுமையால் தனது தாய்க்கு வீடியோ அனுப்பி வைத்து விட்டு இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவசரத் தேவைக்காக தெரிந்த நபரிடம் அவர் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார்.

வட்டியோடு முதல் தொகையை தினேஷ் செலுத்தியும், மேற்கொண்டு பணம் கேட்டு பணம் கொடுத்தவர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். சாவதற்கு முன்பு தனது செல்போனில் தன் தாய்க்கு அழுது கொண்டே நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார். இதன் பின் பூச்சி மருந்தைக் குடித்து தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது தினேஷின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் காவல்துறையைச் சேர்ந்த செல்வக்குமார் உள்பட பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கந்துவட்டியை ஒழிக்க கந்துவட்டி ஆபரேஷன் என்ற திட்டத்தை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிவித்தார். ஆனால், அதனையும் மீறி தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் தினேஷ் தற்கொலை இன்று நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in