இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஈஷா யோகா மையத்தில் பரபரப்பு

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஈஷா யோகா மையத்தில்  பரபரப்பு

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த ரமணா(28) இளைஞர் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலந்துறை போலீஸார், விரைந்து வந்து ரமணாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மனஅழுத்தத்திலிருந்த ரமணா யோகா செய்வதற்காக ஈஷா மையத்திற்கு வந்ததாகவும், இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஈஷா யோகா மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in