முன்விரோதம் காரணமாக இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை; சென்னையில் பயங்கரம்!

கொலை
கொலைமுன்விரோதம் காரணமாக இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை; சென்னையில் பயங்கரம்!

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் குட்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் 26 வயதாகும் கருணா. இவர் சென்னை அயனாவரத்தில் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருணா உட்பட அவரது நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட கும்பலில் யோனா என்ற இளைஞர் மீது கல்லை போட்டுள்ளனர். இதில் காலில் பலத்த காயமடைந்த நிலையில் யோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருணா உட்பட அவரது நண்பர்கள் 6 பேர் மீது 307 கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்த கருணாவை பழி தீர்க்கும் விதமாக யோனா மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் சேர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் கருணாவின் அக்கா வீட்டருகே வைத்து அவர் தலையின் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலக குடியிருப்பு காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடையவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பிச்சென்ற 7 பேரை தேடி வருவதாக தெரிவிக்கின்றனர். குற்றவாளிகள் ஏழு பேரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் அனைவரும் 18 முதல் 20 வயதுகுட்பட்டவர்கள் எனவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த கருணாவின் தந்தை ரவி என்னும் ஆட்டோ ரவி கடந்த 2015ம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும், தற்பொழுது அவரது மகனும் அதே பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பதும் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in