கொடைக்கானல் வியாபாரி வீட்டில் திருட்டு: மதுரை கொள்ளையனுக்கு 3 ஆண்டு சிறை

திருட்டில் பெற்ற பொன்னுமணி
திருட்டில் பெற்ற பொன்னுமணிகொடைக்கானலில் பூட்டை உடைத்து திருட்டு: மதுரை கொள்ளையனுக்கு 3 ஆண்டு சிறை

கொடைக்கானல் பகுதியில் வியாபாரி வீட்டில் திருடிய மதுரை வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த வியாபாரி அசன். இவர் கடந்தாண்டு டிச.18-ல் வீட்டை பூட்டி வெளியூர் சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டு கதவின் பூட்டு உடைபட்டு கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடு போனது தெரிய வந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பொன்னுமணி என்பவர் அசன் வீட்டில் ரூ.1 லட்சம் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

இதன்படி பொன்னுமணியை (22) போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கொடைக்கானல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கார்த்திக், குற்றவாளி பொன்னுமணிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in