சம்பளத்தில் சுகபோக வாழ்க்கை; மதுவுக்கு அடிமை: அறிவுரை சொன்ன உறவினரை கொடூரமாக கொன்ற சிறுவன்

கொலை
கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நள்ளிரவில் உறவுக்கார வாலிபர் ஒருவர், சிறுவனால் துள்ளத், துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் கேசவன்நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ்(32) கூலித் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு லதா என்னும் மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். கார்த்திக் ராஜாவுடன் அவரது உறவுக்கார 16 வயது சிறுவன் ஒருவர் வேலைசெய்து வந்தார். வேலை செய்து கிடைத்த பணத்தை சிறுவன் வீட்டுக்குக் கொடுக்காமல் சுகபோக வாழ்வு வாழ்ந்துள்ளார். மேலும் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். இதனை உறவுக்காரர் என்னும் முறையில் கார்த்திக் ராஜ் பலமுறைக் கண்டித்துள்ளார். ஆனால், அறிவுரை சொன்னதால் கார்த்திக் ராஜை சிறுவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்மேல் வெறுப்பும் உண்டானது.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பும் சிலதினங்களுக்கு முன்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் ராஜ் கேசவன் நகரில் உள்ள தன் வீட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த சிறுவன், கார்த்திக் ராஜின் டூவீலரை நிறுத்தி அவருடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் ராஜாவை தலை, கை என சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திக் ராஜ் மயங்கினார். போலீஸார் விரைந்துவந்து கார்த்திக் ராஜாவை சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் ராஜா உயிர் இழந்தார். இவ்விவகாரத்தில் போலீஸார் 16 வயது சிறுவனைக் கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in