ஓட்டலில் இரவு தங்க மறுத்த இளம்பெண்ணைக் கொன்ற இளைஞர்: திருமணத்தை மீறிய உறவால் நடந்த பயங்கரம்

ஓட்டலில் இரவு தங்க மறுத்த இளம்பெண்ணைக் கொன்ற இளைஞர்: திருமணத்தை மீறிய உறவால் நடந்த பயங்கரம்

இரவு நேரத்தில் தன்னுடன் ஓட்டலில் தங்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பாக்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ரச்சனா. நேற்று முன்தினம் வெளியே சென்ற ரச்சனா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காஜியாபாத்தில் உள்ள ஓட்டலில் ரச்சனா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

அவருடன் ஓட்டலில் தங்கியிருந்த கௌதம் என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " திருமணமான ரச்சிதா, கடந்த மூன்று மாதங்களாக கௌதமுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவ நாளான்று அவரது கணவர் ராஜ்குமாருக்கும், ரச்சனாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ரச்சனா, கௌதமை சந்தித்துள்ளார். அவர் காஜியாபாத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இரவு அங்கேயே தங்க வேண்டும் என்று கௌதம் சொன்னதை ரச்சனா ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கௌதம், ரச்சனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அவரை நேற்று கைது செய்துள்ளோம். வேறு யாரும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்" என்று கூறினார். திருமணத்தை மீறிய உறவால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in