குடும்ப சூழ்நிலையால் கடன் கட்ட முடியவில்லை: டீக்கடைக்காரரை கொடூரமாக கொன்ற கந்துவட்டி கும்பல்

கொலை
கொலை

விருதுநகர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சுந்தரராஜபுரம் கிராமம் மாசாணம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவரது மகன் ஆனந்தகுமார்(30). ஆனந்த்ராஜ் நடத்தும் டீக்கடையில் மகன் ஆனந்தகுமார் வேலை செய்து வந்தார் . இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனந்த்குமார் தேவதானம் என்னும் ஊரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரிடம் 15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

மருதுபாண்டி அந்தப் பகுதியில் பெரிய ரவுடியும் ஆவார். அவரது பெயரும் உள்ளூர் காவல்நிலையத்தில் ரவுடிப் பட்டியலில் உள்ளது. ஆனந்தகுமார் மருதுபாண்டிக்கு தொடர்ந்து வட்டி கொடுத்துவந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் இப்போது கடனும், வட்டியும் செலுத்தாமல் தன் குடும்ப சூழலால் தவித்துள்ளார். இதனால் மருதுபாண்டிக்கும், ஆனந்தகுமாருக்கு இடையே பகை ஏற்பட்டது. இதில் நேற்று இரவு ஆனந்தகுமாருக்கு திடீர் என ஒரு போன் வந்தது. வெளியே சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் ஆனந்தகுமார் சடலமாக குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அவரை இரவு போன் போட்டு வெளியே அழைத்த ரவுடி மருதுபாண்டி, தன் நண்பர்கள் மேலும் 4 பேரோடு சேர்ந்து கொலைசெய்தது தெரியவந்தது. இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் மருதுபாண்டி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in