
கோவை கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் இன்று கிடைத்தது.
இதனையடுத்து கோவில்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் சம்பவ இடமான சொரியம் பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் பின்பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பின்டு கேவட் (25) என்பவரிடமிருந்து இரண்டு கிலோ எடையுள்ள 4 கஞ்சா செடிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.