வேலை செய்த போது தூக்கி வீசப்பட்ட வாலிபர்: வெல்டிங் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம்

வேலை செய்த போது தூக்கி வீசப்பட்ட வாலிபர்: வெல்டிங் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம்

கன்னியாகுமரி மாவட்டம், மாதவாலயம் பகுதியில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், மாதவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகம்மது அசாருதீன்(23). இவர் மாதவராயன் கைகாட்டி பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவர் நேற்று மாலையில் வழக்கம்போல் வேலைசெய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் முகமது அசாருதீன் தூக்கி வீசப்பட்டார்.

அக்கம், பக்கத்தினர் அசாருதீனை உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அசாருதீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீஸார் அசாருதீன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அசாருதீனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் மாதவாலயம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in