விவசாயத்துக்கு டிராக்டர் வாங்கினார்; நொடிந்து போனது தொழில்: இஎம்ஐ கட்ட முடியாமல் உயிரை மாய்த்த விவசாயி

விவசாயத்துக்கு டிராக்டர் வாங்கினார்; நொடிந்து போனது தொழில்: இஎம்ஐ கட்ட முடியாமல் உயிரை மாய்த்த விவசாயி

டிராக்டருக்காக வாங்கிய வங்கிக்கடனை தவணை முறையில் திருப்பிச் செலுத்த முடியாமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ளது மூலக்கரைப்பட்டி. இங்குள்ள மாயநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் கண்ணன்(27). இவர் விஷமருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

பெருமாள் கண்ணனின் தற்கொலை குறித்து மூலக்கரைப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியானது. பெருமாள் கண்ணன், வங்கி ஒன்றில் கடன்பெற்று சொந்தமாக டிராக்டர் வாங்கியுள்ளார். விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் ஓட்டி, அதில் கிடைக்கும் லாபத்தில் தவணைத் தொகையைச் செலுத்தலாம் எனக் கணக்குப்போட்டார் பெருமாள் கண்ணன். ஆனால் டிராக்டர் சரியாக ஓட்டம் இல்லை. இதனால் பெருமாள் கண்ணனால் வங்கியில் சரியான முறையில் தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை.

இதனால் வங்கியில் தவணைத்தொகை அசலும், வட்டியுமாக சேர்ந்து கடன் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தான் பெருமாள் கண்ணன் தற்கொலை செய்ததாகத் தெரியவந்தது. இருந்தும் வேறுகாரணங்கள் இருக்குமா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in