சிறுமியிடம் அத்துமீறல்: போலீஸுக்கு பயந்து திருவாரூர் வாலிபர் தூத்துக்குடியில் தற்கொலை

சிறுமியிடம் அத்துமீறல்: போலீஸுக்கு பயந்து திருவாரூர் வாலிபர் தூத்துக்குடியில் தற்கொலை

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் காவல்துறையினரின் வழக்கிற்கு பயந்து தூத்துக்குடிக்கு வந்து அறை எடுத்துத் தங்கினார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மூவநல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(25). இவர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட சிறுமி ஒருவரிடம் அத்துமீறியுள்ளார். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மன்னார்குடி போலீஸார் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் அங்கிருந்து தலைமறைவானார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடிக்கு வந்தவர், அங்கு அறை எடுத்துத் தங்கினார். இந்நிலையில் இன்று காலையில் சுரேஷ் இருந்த அறை வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. அறையை திறந்து பார்த்தபோது அந்த அறையிலேயே சுரேஷ் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவான நிலையில் காவலர்களுக்குப் பயந்து சுரேஷ் தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in