5 நாட்களாக வீீடு திரும்பவில்லை: திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் போலீஸுக்கு பயந்து தற்கொலை

5 நாட்களாக வீீடு திரும்பவில்லை: திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் போலீஸுக்கு பயந்து தற்கொலை

திருட்டு வழக்கில் போலீஸார் தன்னைத் தேடுவது தெரிந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாக்குளம் குளக்கரையில் வாலிபர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இறந்துகிடந்தது நெல்லை சவுந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்த அரவிந்த்(29) என்பது தெரியவந்தது. டிரைவராக இருந்த அரவிந்திற்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் காணாமல் போன வழக்கு ஒன்று உள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் அரவிந்திற்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். இது அரவிந்திற்கு தெரியவந்துள்ளது. அவர் இதனால் கடந்த சில தினங்களாகவே பயத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் கடந்த 5 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில் திருட்டு வழக்கிற்கு பயந்து அரவிந்த் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in