மேட்டூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் தலை துண்டித்துக்கொலை: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மேட்டூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் தலை துண்டித்துக்கொலை: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மேட்டூர் அரசு மருத்துவமனைக்குள்ளேயே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த ரகுநாதன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் மருத்துவமனையிலேயே ரகு நாதனை சரமாரியாக வெட்டியதோடு தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

தற்போது, இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை என வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். இதில் வெள்ளையன், மூர்த்தி ஆகியோரை போலீஸார் துரத்தியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைக்குள்ளேயே வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in