காதலிப்பதாக 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் 19 வயது இளைஞர் கைது

காதலிப்பதாக 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் 19 வயது இளைஞர் கைது

அரியலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி காலனித் தெருவை சேர்ந்தவர் தீபன்ராஜ்(19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தீபன்ராஜ் குறித்து  சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார் தீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in