கல்யாண மன்னனான கரிமூட்டம் போடும் தொழிலாளி: சிறுமியைக் கடத்தி நான்காவது திருமணம் செய்த போது போக்சோவில் கைது

கல்யாண மன்னனான கரிமூட்டம் போடும் தொழிலாளி: சிறுமியைக் கடத்தி நான்காவது திருமணம் செய்த போது போக்சோவில் கைது

ஏற்கெனவே மூன்று திருமணம் செய்த வாலிபர், நான்காவதாக சிறுமிக்கு தாலிகட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைனர் பெண்ணிற்கு தாலி கட்டியதால் போக்சோ சட்டத்தில் திருமண மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பொதிகுழத்தைச் சேர்ந்தவர் சதீஸ்(38). விறகு கரிமூட்டம் போடும் வேலைசெய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே ரேகா, லதா, முருகலெட்சுமி என மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் ரேகா, லதா இருவரையும் விட்டு பிரிந்துவிட்ட சதீஸ், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் முருகலெட்சுமியுடன் குடும்பம் நடத்திவந்தார்.

இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரைக் காதல் வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றி தாலி கட்டியுள்ளார். அதன் பின்பு முருகலெட்சுமியையும் கைவிட்டுவிட்டு சிறுமியோடு வேறு ஊருக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மைனர் பெண்ணைக் கடத்தி திருமணம் செய்ததாக சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் தீவிர தேடுதலுக்குப் பின்பு உளுந்தூர்பேட்டைப் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை மீட்டனர். போலீஸாருக்குப் பயந்து தலைமறைவாக இருந்த சதீஸையும் கைது செய்து போக்சோ, குழந்தை திருமண தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டார். ஏற்கெனவே மூன்று திருமணம் செய்தவர் மைனர் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்து கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in