எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை முன்னாள் மனைவி உடலில் ஏற்றிய இளைஞர்: அதிர வைக்கும் சம்பவம்

எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை முன்னாள் மனைவி உடலில் ஏற்றிய இளைஞர்: அதிர வைக்கும் சம்பவம்

தனது முன்னாள் மனைவி உடலில் எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை ஏற்றிய சைக்கோ இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் சூர்யதாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, 30). இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூர்யதாஸை அவரது மனைவி விவகாரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யதாஸ், தனது முன்னாள் மனைவியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

இந்த நிலையில், தனது முன்னாள் மனைவியிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சூர்யதாஸ் அழைத்துள்ளார். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அவரை அழைத்துச் சென்ற சூர்யதாஸ், திடீரென மறைத்து வைத்திருந்த ஊசியை முன்னாள் மனைவிக்கு செலுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்து சூர்யதாஸ் தப்பியோடி விட்டார்.

அவ்வழியாக சென்றவர்கள் இளம்பெண் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது நினைவு திரும்பியது. அப்போது தனது முன்னாள் கணவர், ஊசியின் மூலம் ரத்தம் ஏற்றினார் என்று அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை அந்த பெண்ணுக்கு அவரது முன்னாள் கணவர் ஊசி மூலம் செலுத்தியது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார், சூர்யதாஸை நேற்று கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு மருத்துவமனையில் எச்ஐவி பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் ரத்தத்தை வாங்கி வந்து தனது முன்னாள் மனைவிக்கு ஊசி மூலம் சூர்யதாஸ் செலுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தன் முன்னாள் மனைவிக்கு எச்ஐவி பாதித்தவரின் ரத்தத்தை ஏற்றிய இளைஞரின் சைக்கோதனமான செயல் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in