
சென்னை நம்மாழ்வார்பேட்டையில் துணிக்கடையில் துணி எடுத்துவிட்டு பணம் கேட்ட கடையின் உரிமையாளரை பிளேடால் தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருபவர் அரவிந்த். சம்பவத்தன்று இரண்டு இளைஞர்கள் 1,200 ரூபாய் மதிப்பிலான துணிமணிகளை எடுத்துள்ளனர். இதற்கான பணத்தை கடையின் உரிமையாளர் அரவிந்த் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்காமல் இருவரும் துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட முயன்றனர். இதனால் உரிமையாளருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் உரிமையாளரை பிளேடால் தாக்கிவிட்டு துணிகளை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து அரவிந்த் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரனை நடத்திய போலீஸார், ஓட்டேரியை சேர்ந்த சூர்யா, செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சூர்யா மீது ஏற்கெனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்ததது. இதனையடுத்து 1,200 ரூபாய் மதிப்புள்ள துணிகளை போலீஸார் பறிமுதல் செய்து உரிமையாளரிடம் கொடுத்தனர். இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.