குத்திக்கொன்று விடுவேன் என மிரட்டல்: பயிற்சி எஸ்.ஐயை ரவுண்டு கட்டிய வாலிபர் கைது

குத்திக்கொன்று விடுவேன் என மிரட்டல்: பயிற்சி எஸ்.ஐயை ரவுண்டு கட்டிய வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர்களைப் பிடிக்க வந்த பயிற்சி எஸ்.ஐக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல்நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐயாக இருப்பவர் அமலன். இவர் அந்தக் காவல் நிலைய ஆளுகைக்கு உட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்குப்பையுடன் நின்றுகொண்டிருந்த இருவர் அமலனைப் பார்த்ததும் ஓடினர். இதைப் பார்த்த அமலன் அவர்களைத் துரத்தினர். அப்போது மது பாட்டிலை உடைத்து கூர்மையான ஆயுதமாக்கிய இருவரும் அருகில் வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இருந்தும் எஸ்.ஐ அமலன் அதில் ஒருவரைப் பிடித்துவிட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாங்குநேரி அருகில் உள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி(36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியது கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் என்பதும் தெரியவந்தது. சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே மது விற்றதோடு, அதைப் பிடிக்க வந்த எஸ்.ஐயும் கொல்ல முயன்ற சுந்தரபாண்டியைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய ரத்தினகுமாரையும் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in