போராட்டத்தைக் கலைக்கக் கொண்டு வந்த 50 கண்ணீர் புகைக்குண்டுகள் மாயம்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபரால் போலீஸார் அதிர்ச்சி

போராட்டத்தைக் கலைக்கக் கொண்டு வந்த 50 கண்ணீர் புகைக்குண்டுகள் மாயம்:  வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபரால் போலீஸார் அதிர்ச்சி

இலங்கையில் 50 கண்ணீர் புகைக்குண்டுகளைத் திருடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீஸார் கைதுசெய்தனர்.

இலங்கையின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் நடத்திய போராட்டம் புரட்சியாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக கோத்தபய ராஜபக்ச, சுரங்கப்பாதை வழியாக தப்பி மாலத்தீவு சென்றார். அங்கிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்கார்கள் நுழைவதற்காக பொல்துவ சந்தியில் திரண்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் கொண்டு வரப்பட்டன. அப்படிக் கொண்டு வரப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் காணாமல் போனது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது வீட்டில் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 50 கண்ணீர் புகைக்குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். போராட்டப் பகுதியில் இருந்து இவற்றைத் திருடியதாக 31 வயது வாலிபரை போலீஸார் கைது செய்தனர். எதற்காக அவர் கண்ணீர் புகைக்குண்டுகளைத் திருடிச் சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in