குடும்ப பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு; பணம் கேட்டு மிரட்டல்: போலீஸ் பிளானில் சிக்கினார் வாலிபர்

குடும்ப பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு; பணம் கேட்டு மிரட்டல்: போலீஸ் பிளானில் சிக்கினார் வாலிபர்

வயதான ஆண்களிடம் பெண் குரலில் பேசி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வாங்கி ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்டாப்(25) என்பவர் சென்னை முத்தையாள்பேட்டை பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முத்தையாள்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வயதான தந்தையிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குரலில் பேசி பழகி பின்னர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் தனது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது தந்தையின் செல்போனுக்கு அனுப்பியதுடன் 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு் மிரட்டியதாகவும், அப்படி பணத்தை கொடுக்கவில்லை என்றால் அனைத்து ஆபாச புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் முத்தையாள்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் செயலி மூலம் அல்டாப் தந்தையிடம் பெண் குரலில் பேசி பழகி பின்னர் அவரை நம்ப வைத்து புகைப்படங்களை வாங்கி ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார், அல்டாப் மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபருக்கு போன் செய்து பணத்தை தருவதாக கூறி வரவழைத்தனர். அங்கு பணத்தை வாங்க வந்த நபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர் ஏழுகிணறு மூசா தெருவை சேர்ந்த அப்துல்லா(32) என்பதும் வயதான ஆண்களிடம் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி அவர்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்துல்லாவை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து ஒரு செல்போன், 2 ஹாட் டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in