14 வயது சிறுமிக்கு தடபுடலாக நடந்த கல்யாணம்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்: சிறையில் புதுமாப்பிள்ளை!

கைது
கைது

14 வயது சிறுமியைக் கல்யாணம் செய்து குடும்பம் நடத்திவந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் நடந்து முடிந்த இவர்களின் திருமணம் குழந்தைகள் நலக் குழும அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகில் உள்ள வென்றிலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனி. இவரது மகன் மணிகண்ட சாமி(22). படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மணிகண்ட சாமி சந்தையில் அவல், பொரி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் மணிகண்ட சாமி அடிக்கடி அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்றுவந்துள்ளார். அதில் மணிகண்ட சாமியை, மாணவியின் பெற்றோருக்கும் பிடித்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து இருகுடும்பத்தினரும் கூடி பேசி மணிகண்ட சாமிக்கும், 14 வயதே ஆன அந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து ஊர், உறவுகளைத் திரட்டி திருமணமும் செய்துவிட்டனர். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவ்விசயம் தென்காசி மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் மணிகண்ட சாமியைக் கைது செய்தனர். குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் சிறுமியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in