யூடியூப்பை பார்த்து விபரீத செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்: அதிரடி காட்டியது போலீஸ்!

ரகளையில் ஈடுபட்ட சிவரஞ்ஜித்
ரகளையில் ஈடுபட்ட சிவரஞ்ஜித்

மதுரையில் யூடியூப் பார்த்து சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த பட்டதாரி இளைஞரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்ஜித். இவர் மதுரை கோமதிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு மாடி வீட்டில் தங்கி உள்ள அக்கம்பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்ட சிவரஞ்ஜித், அவர்களது இருசக்கர வாகனத்தையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.

மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்
மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் மது போதையில் இருந்த சிவரஞ்ஜித்தை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிவரஞ்ஜித் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்ததும், அதனை அருந்தியதால் அளவுக்கு அதிகமாக போதை ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மதுபானம் தயாரிக்க சிவரஞ்ஜித் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து இன்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in