`என் தங்கையின் வீட்டிற்கு வராதே'... கண்டித்த சகோதரர்: கேட்காத வாலிபருக்கு நிகழ்ந்த துயரம்

கைதான மதன்
கைதான மதன்

பலமுறை கண்டித்தும் தங்கையுடன் நெருக்கமாகப் பழகிய இளைஞரைக் கத்தியால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் இலக்கியா. கணவரைப் பிரிந்து வாழும் இவர், அப்பா வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா அடிக்கடி இலக்கியாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனை இலக்கியாவின் பெரியப்பா மகன் மதன் என்ற குள்ள மதன் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் இலக்கியாவின் வீட்டிற்கு வந்த ராஜா, இலக்கியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மதனுக்கும் ராஜாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த மதன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டினார். தடுக்கப்போன இலக்கியாவிற்கும் கையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ராஜா மற்றும் இலக்கியாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மதனைக் கைது செய்த எண்ணூர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in