காதலில் வீழ்த்தி கல்யாண ஆசை... நம்பி சென்ற 17 வயது சிறுமிக்கு நடந்த துயரம்: சிக்கிய திருமணமான இளைஞர்

காதலில் வீழ்த்தி கல்யாண ஆசை... நம்பி சென்ற 17 வயது சிறுமிக்கு நடந்த துயரம்: சிக்கிய திருமணமான இளைஞர்

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆவடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர் கடையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 21-ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். மகள் திரும்பி வராத காரணத்தால் பெற்றோர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர். காவல்துறையினரின் விசாரணையில் ஆவடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சுபேர் உசேன் (27) என்பவருடன் சிறுமி சென்றதாகத் தெரியவந்துள்ளது.

சுபேர் உசேனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, போலீஸார் சுபேர் உசேனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in