நடுரோட்டில் கட்டிப் பிடித்து, கடுமையாகத் தாக்கிப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்!

நடுரோட்டில் கட்டிப் பிடித்து, கடுமையாகத் தாக்கிப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்!

சென்னையில் தனியாகச் சென்ற பெண் ஒருவரைக் கட்டிப் பிடித்து ரகளையில் ஈடுபட்ட பேராசிரியர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மடிப்பாக்கம் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில் மடிப்பாக்கம் ராம் நகரில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பெண்ணை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வேண்டுமென்றே அந்த பெண்ணை இடித்துத் தள்ளிவிட்டு அவருக்கு உதவி செய்வது போல அவரை கட்டியணைக்க முயல்கிறார்.

அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்ற அந்த இளைஞர் தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in