பிறந்தநாளுக்காக சாலையின் நடுவே மேடைபோட்டு கச்சேரி: கம்பி எண்ணும் இளைஞர்!

பிறந்தநாளுக்காக சாலையின் நடுவே மேடைபோட்டு கச்சேரி: கம்பி எண்ணும் இளைஞர்!

ஹைதராபாத்தில் தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட விரும்பிய 27 வயது இளைஞன், ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத் சந்தோஷ்நகரில் உள்ள தர்கா பர்ஹானா ஷா பகுதியில் வசிக்கும் மஜீத் அலி கான், நவம்பர் 13 அன்று, தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட விரும்பி அங்குள்ள பிரதான சாலையில் ஒரு மேடை அமைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதற்காக டிஜே இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்துள்ளார்.

அதே நேரத்தில் தர்கா பர்ஹானா ஷாவில் வருடாந்திர உர்ஸ் நடைபெற்றது. இதற்கு இடையூறாக இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீஸுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிய மஜீத் அலி மற்றும் டி.ஜே. கம்சர்பு பிரபாகர் ஆகிய இருவர் மீதும் சாலையை மறித்து இடையூறு செய்ததற்காகவும், காவல் துறையினர் பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவருக்கும் 5 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பின்னர், அவர்கள் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in