`தொடர்ந்து பாலியல் உறவு வைத்தார்; அதனால் கொலை செய்தேன்'- கைதான சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை
கொலை

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான சிறுவனை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் சிறுவன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வி(46) என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான சிறுவன் ஒருவர், அடிக்கடி கணேசன் வீட்டிற்கு வந்து சென்றார். படிப்பை இடையில் நிறுத்திவிட்டு தச்சுவேலைப் பார்க்கும் அந்த சிறுவன் கணேசனும் சந்தேகப்படவில்லை.

கணேசன் தான் குத்தகைக்கு எடுத்த நிலங்களில் இரவில் வன விலங்குகள் வராமல் இருக்க இரவு காவலுக்குச் சென்றுவிடுவார். அப்போது, அந்த 18 வயதான சிறுவனே செல்விக்குத் துணையாக வீட்டில் படுத்துக் கொள்வார். ஒருகட்டத்தில் செல்விக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் செல்வியின் வீடு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. உள்ளே செல்வி இறந்து கிடந்தார்.

இதனிடையே பன்றிமலை பகுதியில் பதுங்கியிருந்த சிறுவன் பிடிபட்டார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், “செல்வி தன்னை பாலியல் ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தினார். நான் அதற்கு மறுத்து கீழே தள்ளிவிட்டேன். அதில் கீழே கிடந்த கல்லில் மோதி செல்வி மயங்கினார். தொடர்ந்து அங்கிருந்த குழவிக்கல்லைத் தலையில் தூக்கிப்போட்டு செல்வியைக் கொலை செய்தேன்” என்றார்.

தன்னைவிட வயது குறைந்த சிறுவனுக்கு தொடர் பாலியல் தொல்லைக் கொடுத்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in